கொக்கைன் வழக்கு: நடிகர் விஷ்வ கொடிகாரவிற்கு அபராதம்!

arvloshan.com

கொக்கைன் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர் விஷ்வ கொடிகாரவிற்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து கல்கிஸ்ஸே நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வியாழக்கிழமை (17) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான நடிகர் விஷ்வ கொடிகார தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, கல்கிஸ்ஸே நீதிவான் காஞ்சனா நிரஞ்சலா சில்வா இந்த அபராத தண்டனையை விதித்தார்.

வெள்ளவத்தை கடலோரப் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் புதன்கிழமை (16) இரவு வெள்ளவத்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார். இதன்போது போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களில் இவரும் அடங்குவதுடன், கைது செய்யப்பட்ட அனைவரும் கல்கிஸ்ஸே நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் நடிகர் விஷ்வ கொடிகாரவிடமிருந்து 1,050 மில்லிகிராம் கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதேவேளை, எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டால், சந்தேகநபர்கள் அனைவரும் கட்டாய மறுவாழ்வு மையத்திற்கு  அனுப்பப்படுவார்கள் என நீதிவான் இதன்போது கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

அனோஜனின் குடும்பத்தை சந்தித்தார் ரிசாத் பதியுதீன்: சவூதி மன்னருக்கு கூட்டு மேன்முறையீடு செய்ய தீர்மானம்

...

arvoshan.com

அனோஜன் விடுதலை: கட்சித் தலைவர்களின் கூட்டுக் கோரிக்கைக்கு கஜேந்திரகுமார் வலியுறுத்து

...

arvoshan.com

சமூக வலைத்தள போதைப்பொருள் காணொளி: 11 வயது சிறுவன் பொலிஸ் பாதுகாப்பில்

...

arvoshan.com

‘எனது வாகனம், எனது எரிபொருள்’ என பொது வீதியில் கூற முடியாது: அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை!

...

arvoshan.com

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிட சவூதி அரேபியாவிடம் அலி சப்ரி கோரிக்கை!

...

arvoshan.com

சுரேஷ் சாலேயின் மனு மீதான தீர்மானம் நவம்பர் 27 இல் அறிவிப்பு!

...

arvoshan.com

வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும் சேவை வழங்கிய ரயில்வே ஊழியர்களுக்கு பிரதி அமைச்சர் பாராட்டு!

...

arvoshan.com

விமல் வீரவன்சவின் உரை நீதிமன்ற அவமதிப்பா? விசாரணைக்கு உத்தரவு!

...

arvoshan.com

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் அனோஜனின் வழக்கு: இலங்கை வெளிவிவகார அமைச்சு விளக்கம்

...

arvoshan.com

போலி லேபிள் பழச்சாறு விநியோகம்: வத்தளை நபருக்கு ரூ. 42,000 அபராதம்

...

arvoshan.com

உள்நாட்டு மிதக்கும் சூரியமின் நிலையம் திறப்பு: ஆண்டிற்கு $3 மில்லியன் சேமிப்பு!

...

arvoshan.com

வங்காள விரிகுடாவில் புயல் சின்னம்: ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு எச்சரிக்கை!

...

arvoshan.com

அதிவேகப் பாதைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: இன்று நள்ளிரவு முதல் அமல்!

...

arvoshan.com

கடலில் தவறி விழுந்த துறைமுக வழிகாட்டி இலங்கை கடற்படையினரால் மீட்பு

...

arvoshan.com

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மேம்பாட்டிற்கு 336 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

...