இந்தியாவில் கோலாகலமாகத் தொடங்கிய 'ஐபோன் 18' விற்பனை: நீண்ட வரிசையில் திரண்ட மக்கள்!

arvloshan.com

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான 'ஐபோன் 18 புரோ' (iPhone 18 Pro) மற்றும் 'புரோ மேக்ஸ்' (Pro Max) ஆகிய கைப்பேசி மாடல்களின் உத்தியோகபூர்வ விற்பனை இந்தியாவில் நேற்று முறைப்படி ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து, நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள ஆப்பிள் விற்பனை நிலையங்களில் புதிய கைப்பேசிகளைக் கொள்வன செய்வதற்காகப் பெருந்திரளான மக்கள் நீண்ட வரிசைகளில் ஆர்வத்துடன் காத்திருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

கடந்த செப்டம்பர் 9-ஆம் திகதி நடைபெற்ற ‘சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்’ (Surprise and Shine) என்ற விசேட அறிமுக நிகழ்வில், ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய ரக கைப்பேசிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தது. தற்பொழுது இணையவழி அங்காடி (Online store) மூலமாகவும், இந்தியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஆறு பிரதான சில்லறை விற்பனை நிலையங்கள்  மூலமாகவும் இந்த 'புரோ' மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

புதிய ஐபோன்களின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ள போதிலும், நுகர்வோரின் கொள்வனவு ஆர்வத்தில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

புதிய தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்:

புதிய கைப்பேசியைக் கொள்வன செய்த வாடிக்கையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ஆப்பிள் கைப்பேசியை வாங்குவது தங்களுக்கு ஒரு பண்டிகையைக் கொண்டாடுவது போன்ற உணர்வைத் தருவதாகக் குறிப்பிட்டனர். முந்தைய மாடல்களுடன் ஒப்பிடுகையில், இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 'ஐ.ஓ.எஸ் 27' (iOS 27) இயங்குதளம், அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட நிழற்படக் கருவி (Camera) தரம், 'ஏ20 புரோ சிப்' (A20 Pro Chip) செயலி மற்றும் 'வேப்பர் சேம்பர்' (Vapor Chamber) குளிர்விக்கும் தொழில்நுட்பம் போன்ற சிறப்பம்சங்கள் காரணத்தினாலேயே தாங்கள் உடனடியாக இதனை வாங்கியதாகத் தெரிவித்தனர்.

மேலும், இந்தப் புதிய தொலைபேசிகளில் மாறும் குவிய விகிதம் (Variable aperture) கொண்ட 48 மெகாபிக்சல் (48 MP Fusion) முதன்மை கேமரா மற்றும் புதிய புரோ கேமரா கட்டுப்பாட்டு அமைப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

விற்பனை விலைகள்:

கருப்பு, வெள்ளி, கிளேசியர் மற்றும் புதிய பர்கண்டி ஆகிய நான்கு கவர்ச்சிகரமான வண்ணங்களில் இந்த கைப்பேசிகள் சந்தைக்கு வந்துள்ளன.

இதில் 'ஐபோன் 18 புரோ' 256 ஜி.பி (256GB) சேமிப்பகத்தைக் (Storage) கொண்ட அடிப்படை மாடலின் ஆரம்ப விலை இந்திய ரூபாயில் 1,64,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் 512 ஜி.பி, 1 டி.பி (1TB) மற்றும் 2 டி.பி மாடல்கள் முறையே ரூ.1,89,900, ரூ.2,39,900 மற்றும் ரூ.3,14,900 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கூகுளின் 'ஜெமினி' AI ஊடுருவல்: சோதனையில் 3 நிறுவனங்கள் பாதிப்பு!

...

arvoshan.com

அடுத்த ஆண்டுக்குள் 'ரோபோ மூளை' புரட்சி: சீன நிறுவனம் சாதனை!

...

arvoshan.com

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்க யோசனை!

...

arvoshan.com

பொய் பேசும் செயற்கை நுண்ணறிவு முதல் மனிதகுலத்தின் அழிவு வரை: தொழில்நுட்ப உலகின் ஆபத்தான கட்டம்!

...

arvoshan.com

நீரடி கண்காணிப்பு: தங்க அரோவனா மீன் வடிவில் புதிய சீன ரோபோ!

...

arvoshan.com

நியூயோர்க்கில் ஹுவாய் நிறுவனத்திற்கு எதிராக குற்றவியல் வழக்கு விசாரணை ஆரம்பம்

...

arvoshan.com

ஸ்மார்ட்போன் தேர்வு: மூளையின் செயல்பாடா, பழக்கவழக்கமா? - புதிய ஆய்வு!

...

arvoshan.com

நிலவு ஆராய்ச்சியில் புதிய புரட்சி: ஐபிஎம் - நாசா இணைந்து சக்திவாய்ந்த ஏஐ மாதிரி அறிமுகம்!

...

arvoshan.com

மாறுபடும் துளை கேமரா தொழில்நுட்பத்துடன் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் 18 புரோ: புதிய அம்சங்கள் என்ன?

...

arvoshan.com

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் ‘சிங்க நெபுலா’: நாசா வெளியிட்ட புதிய காட்சி

...

arvoshan.com

6G உலகக் கூட்டமைப்பில் இந்தியா இணைப்பு

...

arvoshan.com

நாசாவின் ஸ்விஃப்ட் தொலைநோக்கியை நெருங்கி தனியார் விண்கலம் சாதனை

...

arvoshan.com

கூகிள் புகைப்படங்களுடன் 'ஜெமினி ஸ்பார்க்' இணைப்பு: புதிய AI வசதி அறிமுகம்!

...

arvoshan.com

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 'இஓஎஸ்-05' செயற்கைக்கோள்!

...

arvoshan.com

எட்டு வருட பயணத்தின் பின் புதனை அடைகிறது 'பெபிகொலம்போ' விண்கலம்!

...