ஐபோன் வெறியர்களுக்கு மிரட்டலான செய்தி... இனி நீருக்கடியிலும் நீங்கள் பயன்படுத்தலாம்
ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. டைட்டனியம் உலோகத்தால் உருவாக்கப்பட்ட முதல் ஐபோன் ஸ்மார்ட்போன் என்பதால், ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அறிமுகமான பிறகு கலவையான விமர்சனத்தை பெற்றது. அதாவது, சிற்சில பிரச்னைகள் இருப்பதாக கூறப்பட்டது.
Apple 16 Series Underwater Mode: ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். மேலும் ப்ரோ மேக்ஸ் மொடல் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது.
அதாவது, ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள ஐபோன் 16 சீரிஸை நீருக்கடியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அம்சம் 'Underwater Mode' என்ற பெயருடன் வருகிறது.
இந்த புதிய அம்சத்தினால் பயனர்கள் நீருக்கடியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிதாக எடுக்க முடியும்.
மேலும், ஐபோன் 16 சீரிஸ் மீதான எதிர்பார்ப்பும் தற்போது கிளம்பியிருக்கிறது. குறிப்பாக, ஐபோன் 16 சீரிஸ் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளிவந்தபடியே இருக்கின்றன.